கணினியுக ஆதிக்கத்தின் தாக்கமாக இணையதளம் மூலமாக சொத்து வாங்குவது பற்றிய தேடல்கள் அதிகரித்து வருகின்றன. எந்த இடத்தை பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக இணையதளத்தில் தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.
அதனால் சொத்து வாங்க நினைக்கும் பலருக்கு இணையதளம் பயனுள்ளதாக அமைகிறது. அதற்கேற்ப ரியல் எஸ்டேட் தகவல்களை மையப்படுத்தி இயங்கும் பிரத்தியேக இணைய தளங்கள் அதிகரித்து வருகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்கள் இணையதளம் மூலமாக கட்டுமான திட்டங்களை காட்சிப்படுத்தி வருகின்றன.
தாங்கள் கட்டமைக்கும் திட்டங்களை பட்டியலிடுகின்றன. அத்துடன் எந்தெந்த பகுதிகளில் சமூக கட்டமைப்புகள் பெருகி வருகின்றன. வளர்ச்சி நிலவரம் எப்படி இருக்கிறது? சொத்து மதிப்பு எவ்வளவு? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது? நமது பட்ஜெட்டுக்கு தக்கபடி சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதிகள் எவை? உள்ளிட்ட எல்லா தகவல்களையும் இணையதளம் வாயிலாக திரட்டி விடலாம். அத்துடன் வீட்டுக்கடன், சொத்து பற்றிய ஆவண சரிபார்ப்பு உள்ளிட்ட பல வசதிகள் இணையதளம் மூலம் கிடைக்கின்றன.
சொத்து விற்பனை
சொத்துக்கான வில்லங்க சான்று விவரங்களை அரசு இணையதளத்தில் எளிதாக பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை சரிபார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால் இணையதளம் மூலமாக சொத்து வாங்குவதற்கான தேடல்கள் பெருகி வருகின்றன.
இணையதளம் மூலமாக வீடு, வீட்டுமனை விற்பனையும் நடக்கிறது. சொத்து பற்றிய விவரங்களை குறிப்பிட்டு முன்பதிவும் செய்யப்படுகின்றன. அப்படி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து சொத்து வாங்குவதாக இருந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சொத்து பற்றிய ஆவண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆவண சரிபார்ப்பு
இணையதளத்தில் நகல் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அவை சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும். முக்கியமாக தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ், திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை அலசி ஆராய வேண்டும். அவற்றின் ஒரிஜினல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது நல்லது.
மேலும் அந்த இடம் எந்த பகுதியில் இருக்கிறது? அதனை சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு வசதிகள் என்ன? வீடு வாங்குவதாக இருந்தால் அதன் கட்டுமான தரம் எப்படி இருக்கிறது? காற்றோட்டமான சூழலில் அமைந்திருக்கிறதா? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். வீட்டுமனையாக இருந்தால் வளர்ச்சி அடைந்த பகுதியில் அமைந்திருக்கிறதா? அல்லது விரைவாக வளர்ச்சி அடைவதற்கான அறிகுறி இருக்கிறதா? மண்ணின் தன்மை எப்படி இருக்கிறது? என்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
முன்பணம் செலுத்துவதில் கவனம்
மேலும் வீட்டை கட்டித்தரும் கட்டுமான நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்வதும் முக்கியம். அந்த கட்டுமான நிறுவனம் இதுவரை கட்டமைத்த கட்டுமான திட்டங்களை பார்வையிட்டு தெளிவுப்படுத்திக்கொள்வது நல்லது. அதைவிட முக்கியமாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதாக இருந்தால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நன்றாக படித்து பார்த்து தெளிவுபடுத்திக்கொண்டபின்பு பணம் செலுத்துவது நல்லது.
ஏனெனில் உங்களுக்கு வீடு பிடிக்கவில்லை என்றால் கட்டிய முன்பணத்தை திருப்பி தருவார்களா? வீட்டை புக்கிங் செய்வதற்கு காலதாமதம் செய்தால் பணம் பிடித்தம் செய்வார்களா? எவ்வளவு தொகை பிடித்தம் செய்வார்கள்? என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம். சில நிறுவனங்கள் முன்பணத்தை திருப்பி தர மறுக்கலாம். எனவே ஏதாவது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு
விவரங்களை கேட்டறிவது நல்லது

No comments:
Post a Comment