Sunday, June 14, 2015

நேரில் வரத் தேவையில்லை: ஆன்லைனில் வழக்கு தொடரும் புதிய வசதி - சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் அறிமுகம்

ஆன்லைனிலேயே வழக்கு தொட ரும் வசதியை சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் அறிமுகப் படுத்த உள்ளது. இதன்மூலம் மனுதாரர்களின் நேரமும் பணமும் வெகுவாக மிச்சமாகும்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன் றங்கள், கீழமை நீதிமன்றங்களை கணினிமயமாக்கும் திட்டங்கள் படிப்படியாக நடந்துவருகின்றன. ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகள் பட்டியல், வழக்கின் தற்போதைய நிலை, தீர்ப்பு விவரம் போன்றவற்றை நீதிமன்ற இணையதளத்தில் பார்க்க முடிகிறது. வழக்கறிஞருக்கான வழக்குகள் பட்டியலை அவர் களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த வரிசையில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர ஆன்லைனில் மனு தாக்கல் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உயர் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன்படி, ஆன் லைனில் மனு தாக்கல் செய் வதற்கேற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் தேசிய தகவல் மையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
புகார்களும் ஆன்லைனில்..
இதர புகார்களை ஆன்லைனில் தெரிவிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இதுபற்றி உயர் நீதிமன்ற நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மீது புகார்கள் கூற விரும்பினால், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் மட்டுமே அனுப்ப முடியும். இத்தகைய புகார்கள் மீதான நட வடிக்கை குறித்த விவரம், புகார் தாரரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பப்படுகிறது. புகார் குறித்து உடனுக்குடன் விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக் கப்படுவதுடன், தேவைப்பட்டால் அதுகுறித்து தபாலிலும் பதில் அனுப்பப்படுகிறது. இந்த சேவையை மேம்படுத்த ஆன் லைனில் புகார் அளிக்கும் புதிய வச தியை ஏற்படுத்தித் தரவும் உயர் நீதி மன்றம் திட்டமிட்டுள்ளது’’ என்றனர்.
செல்போனில் விசாரணை விவரம்
மேலும், வழக்கு விசாரணை நிலவரத்தை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் தங்களது ஸ்மார்ட் போனிலேயே தெரிந்துகொள்ளும் வசதியும் தற்போது உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தின் ‘டவுன்லோடு’ பகுதியில் 3-வதாக உள்ள ஆண்ட் ராய்டு அப்ஸ் டிஸ்ப்போர்டு (Android Apps Dispboard) என்ற செயலியை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்ய வேண்டும். எந்த நீதிமன்றத் தில், எத்தனையாவது வழக்கு விசா ரணை நடக்கிறது, தங்கள் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்ற ‘டிஸ்பிளே போர்டை’ செல் போன் திரையிலேயே காணமுடியும்.
ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்வது, புகார் அளிப்பது போன்ற வசதிகளும் அமலுக்கு வந்தால், நீதிமன்றம் தொடர்பான பல பணிகளை வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் மூலம் மேற்கொள்ள முடியும். இதற்காக பொதுமக்கள் சென்னைக்கு வரத் தேவையில்லை. வழக்காடிகளின் நேரமும் பணமும் வெகுவாக மிச்சமாகும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறது உயர் நீதிமன்ற நிர்வாகம்.

இணையதளம் மூலம் சொத்து வாங்கப்போகிறீர்களா?

ணினியுக ஆதிக்கத்தின் தாக்கமாக இணையதளம் மூலமாக சொத்து வாங்குவது பற்றிய தேடல்கள் அதிகரித்து வருகின்றன. எந்த இடத்தை பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக இணையதளத்தில் தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. 

அதனால் சொத்து வாங்க நினைக்கும் பலருக்கு இணையதளம் பயனுள்ளதாக அமைகிறது. அதற்கேற்ப ரியல் எஸ்டேட் தகவல்களை மையப்படுத்தி இயங்கும் பிரத்தியேக இணைய தளங்கள் அதிகரித்து வருகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்கள் இணையதளம் மூலமாக கட்டுமான திட்டங்களை காட்சிப்படுத்தி வருகின்றன. 

 தாங்கள் கட்டமைக்கும் திட்டங்களை பட்டியலிடுகின்றன. அத்துடன் எந்தெந்த பகுதிகளில் சமூக கட்டமைப்புகள் பெருகி வருகின்றன. வளர்ச்சி நிலவரம் எப்படி இருக்கிறது? சொத்து மதிப்பு எவ்வளவு? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது? நமது பட்ஜெட்டுக்கு தக்கபடி சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதிகள் எவை? உள்ளிட்ட எல்லா தகவல்களையும் இணையதளம் வாயிலாக திரட்டி விடலாம். அத்துடன் வீட்டுக்கடன், சொத்து பற்றிய ஆவண சரிபார்ப்பு  உள்ளிட்ட பல வசதிகள் இணையதளம் மூலம் கிடைக்கின்றன. 

சொத்து விற்பனை

சொத்துக்கான வில்லங்க சான்று விவரங்களை அரசு இணையதளத்தில் எளிதாக பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை சரிபார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால் இணையதளம் மூலமாக சொத்து வாங்குவதற்கான தேடல்கள் பெருகி வருகின்றன. 

 இணையதளம் மூலமாக வீடு, வீட்டுமனை விற்பனையும் நடக்கிறது. சொத்து பற்றிய விவரங்களை குறிப்பிட்டு முன்பதிவும் செய்யப்படுகின்றன. அப்படி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து சொத்து வாங்குவதாக இருந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சொத்து பற்றிய ஆவண விஷயத்தில்  கவனமாக இருக்க வேண்டும். 

ஆவண சரிபார்ப்பு 

இணையதளத்தில் நகல் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அவை சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும். முக்கியமாக தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ், திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை அலசி ஆராய வேண்டும். அவற்றின் ஒரிஜினல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது நல்லது. 

 மேலும் அந்த இடம் எந்த பகுதியில் இருக்கிறது? அதனை சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு வசதிகள் என்ன? வீடு வாங்குவதாக இருந்தால் அதன் கட்டுமான தரம் எப்படி இருக்கிறது? காற்றோட்டமான சூழலில் அமைந்திருக்கிறதா? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். வீட்டுமனையாக இருந்தால் வளர்ச்சி அடைந்த பகுதியில் அமைந்திருக்கிறதா? அல்லது விரைவாக வளர்ச்சி அடைவதற்கான அறிகுறி இருக்கிறதா? மண்ணின் தன்மை எப்படி இருக்கிறது? என்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். 

முன்பணம் செலுத்துவதில் கவனம்

மேலும் வீட்டை கட்டித்தரும் கட்டுமான நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்வதும் முக்கியம். அந்த கட்டுமான நிறுவனம் இதுவரை கட்டமைத்த கட்டுமான திட்டங்களை பார்வையிட்டு தெளிவுப்படுத்திக்கொள்வது நல்லது. அதைவிட முக்கியமாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதாக இருந்தால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நன்றாக படித்து பார்த்து தெளிவுபடுத்திக்கொண்டபின்பு பணம் செலுத்துவது நல்லது. 

 ஏனெனில் உங்களுக்கு வீடு பிடிக்கவில்லை என்றால் கட்டிய முன்பணத்தை திருப்பி தருவார்களா? வீட்டை புக்கிங் செய்வதற்கு காலதாமதம் செய்தால் பணம் பிடித்தம் செய்வார்களா? எவ்வளவு தொகை பிடித்தம் செய்வார்கள்? என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம். சில நிறுவனங்கள் முன்பணத்தை திருப்பி தர மறுக்கலாம். எனவே ஏதாவது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு 
விவரங்களை கேட்டறிவது நல்லது

இணையதளம் மூலம் சொத்து வாங்கப்போகிறீர்களா?||WebsiteByPropertyBuying

இணையதளம் மூலம் சொத்து வாங்கப்போகிறீர்களா?||WebsiteByPropertyBuying

Friday, June 12, 2015

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற


20 hrs · 
இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.
இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/…/birthCertificateList…
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற -http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateBasi…
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateList…
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php…
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php…
மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு -https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் -http://tirunelvelicorp.tn.gov.in/download.html

Friday, June 5, 2015

ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!

ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்