Wednesday, November 18, 2015

Regha Health Care ( A Non Profit Organisation ): அமைதி! ஆரோக்கியம்! மூலிகை இல்லம்

Regha Health Care ( A Non Profit Organisation ): அமைதி! ஆரோக்கியம்! மூலிகை இல்லம்: வீட்டைவிட்டு வெளியே வந்தாலே, டென்ஷன். அப்படி எனில், வீடாவது அமைதியைத் தர வேண்டும்தானே? ‘‘இருப்பதோ ரெண்டு ரூம். இதுல, எப்பப் பாரு டி.வி ...

Regha Health Care ( A Non Profit Organisation ): எலுமிச்சம்பழம் (Lemon)

Regha Health Care ( A Non Profit Organisation ): எலுமிச்சம்பழம் (Lemon):  கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை மனிதர்களுக்கு நோய் வராமலும், வந்தால் பேணிப் பாதுகாக்கவும் பயன்படும் ஓர் ஒப்புயர்வற்ற ...

Regha Health Care ( A Non Profit Organisation ): யோக முத்திரைகள்

Regha Health Care ( A Non Profit Organisation ): யோக முத்திரைகள்: யோக முத்திரைகள் பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்க...

Saturday, October 24, 2015

K-Link Health Care India Pvt Ltd - Theni Stockist: K-Sophie Regular Flow (Blue)

Regha Health Care ( A Non Profit Organisation ): அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்

Regha Health Care ( A Non Profit Organisation ): அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்: ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ ,  வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரி...

Regha Health Care ( A Non Profit Organisation ): இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள்

Regha Health Care ( A Non Profit Organisation ): இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள்:   அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியத...

Regha Health Care ( A Non Profit Organisation ): சித்த மருத்துவ குறிப்புகள்

Regha Health Care ( A Non Profit Organisation ): சித்த மருத்துவ குறிப்புகள்: 1. மாம்பழம்:  முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவ...

Regha Health Care ( A Non Profit Organisation ): Tips for Exercise, Diet and Stress Reduction

Regha Health Care ( A Non Profit Organisation ): Tips for Exercise, Diet and Stress Reduction: Tips for Exercise, Diet and Stress Reduction Tips for Recovering From Depression If you've had depression, you know how hopeless you...

Regha Health Care ( A Non Profit Organisation ): Blood

Regha Health Care ( A Non Profit Organisation ): Blood:   Humans can't live without blood. Without blood, the body's organs couldn't get the oxygen and nutrients they need to survive, ...

Regha Health Care ( A Non Profit Organisation ): நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Regha Health Care ( A Non Profit Organisation ): நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நோயின்றி   வாழ   பின்பற்ற   வேண்டிய   வழிமுறைகள்   நம் உடலானது நிலம் ,  நீர் ,  நெருப்பு ,  காற்று ,  ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்க...

Wednesday, October 21, 2015

ShareMarket: வாட்ஸ் அப் நம்பர் 9842799622http://panguvarthagau...

ShareMarket: வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagau...
: வாட்ஸ் அப் நம்பர் 9842799622 http://panguvarthagaulagam.blogspot.in/ சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு. +++++++++++++...

Friday, October 9, 2015

வெந்நீரில் உப்பு கலந்து கண்களை கழுவுங்கள்! | நாயகி | Nayaki | tamil weekly supplements

திருமணத்தை பதிவு செய்வீர்! | நாயகி | Nayaki | tamil weekly supplements

Trading Calculator: Stock Valuation Calculator

Trading Calculator: Stock Valuation Calculator: The purpose of this calculator is to determine or verify the stock's BUYING PRICE based on EPS values. No. of Ye...

முதலீடு: இனி 90% மதிப்பிற்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்

Thursday, September 3, 2015

RTI - A. Govindaraj, Tirupur: 2811 - ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங...

RTI - A. Govindaraj, Tirupur: 2811 - ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங...: https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wejY4OWVjWDhxWmM/view?usp=sharing

RTI - A. Govindaraj, Tirupur: 1558 - வேலை வாய்ப்பு அலுவலகம், பதிவு மூப்பு, பதிவு...

RTI - A. Govindaraj, Tirupur: 2162 - Duties Of Village Administrative Officers

RTI - A. Govindaraj, Tirupur: 2534 - V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன....

RTI - A. Govindaraj, Tirupur: 2534 - V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன....: 1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அப ிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை ...

RTI - A. Govindaraj, Tirupur: 2315 - இறந்தவர், தன்னுடைய Nominee யார் என்பதை குறி...

RTI - A. Govindaraj, Tirupur: 2315 - இறந்தவர், தன்னுடைய Nominee யார் என்பதை குறி...: திருமணமான ஒருவர், தனது Nominee ஐ, தனது அம்மாவை நியமனம் செய்துவிட்டால், அவர் இறப்புக்கு பின்னர், அவருடைய இறப்பு பலன், அவருடைய தாயாருக்கு மட்...

RTI - A. Govindaraj, Tirupur: 2376 - உயில் சட்டரீதியாக செல்லத்தக்கது என்று நிரூப...

Wednesday, August 26, 2015

தகவல் திரட்டி !: பேஸ்புக்கில் தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்...

தகவல் திரட்டி !: பேஸ்புக்கில் தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்...: பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும். நான் என்னதான் ந...

தகவல் திரட்டி !: இன்டர்வியூவுக்கு உதவும் செயலி (InterviewReady) !

தகவல் திரட்டி !: இன்டர்வியூவுக்கு உதவும் செயலி (InterviewReady) !: இன்டர்வியூவுக்கு உதவும் செயலி :  டிசிஎஸ் அறிமுகம்  டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (டிசிஎஸ்) புதிதாக `இன்டர...

Thursday, August 20, 2015

தகவல் திரட்டி !: பாஸ்போர்ட் தொடர்பான கேள்வி-பதில் !

தகவல் திரட்டி !: பாஸ்போர்ட் தொடர்பான கேள்வி-பதில் !: பாஸ்போர்ட் தொடர்பான உங்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி க.பாலமுருகன்.   1. என் மகனுக்கு வயது 21. இவ...

தகவல் திரட்டி !: பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம் ?

தகவல் திரட்டி !: பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம் ?: பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையு...

தகவல் திரட்டி !: நீங்களும் கல்விக் கடன் பெறலாம் !

தகவல் திரட்டி !: நீங்களும் கல்விக் கடன் பெறலாம் !: உயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப...

Sunday, June 14, 2015

நேரில் வரத் தேவையில்லை: ஆன்லைனில் வழக்கு தொடரும் புதிய வசதி - சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் அறிமுகம்

ஆன்லைனிலேயே வழக்கு தொட ரும் வசதியை சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் அறிமுகப் படுத்த உள்ளது. இதன்மூலம் மனுதாரர்களின் நேரமும் பணமும் வெகுவாக மிச்சமாகும்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன் றங்கள், கீழமை நீதிமன்றங்களை கணினிமயமாக்கும் திட்டங்கள் படிப்படியாக நடந்துவருகின்றன. ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகள் பட்டியல், வழக்கின் தற்போதைய நிலை, தீர்ப்பு விவரம் போன்றவற்றை நீதிமன்ற இணையதளத்தில் பார்க்க முடிகிறது. வழக்கறிஞருக்கான வழக்குகள் பட்டியலை அவர் களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த வரிசையில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர ஆன்லைனில் மனு தாக்கல் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உயர் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன்படி, ஆன் லைனில் மனு தாக்கல் செய் வதற்கேற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் தேசிய தகவல் மையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
புகார்களும் ஆன்லைனில்..
இதர புகார்களை ஆன்லைனில் தெரிவிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இதுபற்றி உயர் நீதிமன்ற நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மீது புகார்கள் கூற விரும்பினால், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் மட்டுமே அனுப்ப முடியும். இத்தகைய புகார்கள் மீதான நட வடிக்கை குறித்த விவரம், புகார் தாரரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பப்படுகிறது. புகார் குறித்து உடனுக்குடன் விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக் கப்படுவதுடன், தேவைப்பட்டால் அதுகுறித்து தபாலிலும் பதில் அனுப்பப்படுகிறது. இந்த சேவையை மேம்படுத்த ஆன் லைனில் புகார் அளிக்கும் புதிய வச தியை ஏற்படுத்தித் தரவும் உயர் நீதி மன்றம் திட்டமிட்டுள்ளது’’ என்றனர்.
செல்போனில் விசாரணை விவரம்
மேலும், வழக்கு விசாரணை நிலவரத்தை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் தங்களது ஸ்மார்ட் போனிலேயே தெரிந்துகொள்ளும் வசதியும் தற்போது உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தின் ‘டவுன்லோடு’ பகுதியில் 3-வதாக உள்ள ஆண்ட் ராய்டு அப்ஸ் டிஸ்ப்போர்டு (Android Apps Dispboard) என்ற செயலியை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்ய வேண்டும். எந்த நீதிமன்றத் தில், எத்தனையாவது வழக்கு விசா ரணை நடக்கிறது, தங்கள் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்ற ‘டிஸ்பிளே போர்டை’ செல் போன் திரையிலேயே காணமுடியும்.
ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்வது, புகார் அளிப்பது போன்ற வசதிகளும் அமலுக்கு வந்தால், நீதிமன்றம் தொடர்பான பல பணிகளை வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் மூலம் மேற்கொள்ள முடியும். இதற்காக பொதுமக்கள் சென்னைக்கு வரத் தேவையில்லை. வழக்காடிகளின் நேரமும் பணமும் வெகுவாக மிச்சமாகும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறது உயர் நீதிமன்ற நிர்வாகம்.

இணையதளம் மூலம் சொத்து வாங்கப்போகிறீர்களா?

ணினியுக ஆதிக்கத்தின் தாக்கமாக இணையதளம் மூலமாக சொத்து வாங்குவது பற்றிய தேடல்கள் அதிகரித்து வருகின்றன. எந்த இடத்தை பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக இணையதளத்தில் தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. 

அதனால் சொத்து வாங்க நினைக்கும் பலருக்கு இணையதளம் பயனுள்ளதாக அமைகிறது. அதற்கேற்ப ரியல் எஸ்டேட் தகவல்களை மையப்படுத்தி இயங்கும் பிரத்தியேக இணைய தளங்கள் அதிகரித்து வருகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்கள் இணையதளம் மூலமாக கட்டுமான திட்டங்களை காட்சிப்படுத்தி வருகின்றன. 

 தாங்கள் கட்டமைக்கும் திட்டங்களை பட்டியலிடுகின்றன. அத்துடன் எந்தெந்த பகுதிகளில் சமூக கட்டமைப்புகள் பெருகி வருகின்றன. வளர்ச்சி நிலவரம் எப்படி இருக்கிறது? சொத்து மதிப்பு எவ்வளவு? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது? நமது பட்ஜெட்டுக்கு தக்கபடி சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதிகள் எவை? உள்ளிட்ட எல்லா தகவல்களையும் இணையதளம் வாயிலாக திரட்டி விடலாம். அத்துடன் வீட்டுக்கடன், சொத்து பற்றிய ஆவண சரிபார்ப்பு  உள்ளிட்ட பல வசதிகள் இணையதளம் மூலம் கிடைக்கின்றன. 

சொத்து விற்பனை

சொத்துக்கான வில்லங்க சான்று விவரங்களை அரசு இணையதளத்தில் எளிதாக பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை சரிபார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால் இணையதளம் மூலமாக சொத்து வாங்குவதற்கான தேடல்கள் பெருகி வருகின்றன. 

 இணையதளம் மூலமாக வீடு, வீட்டுமனை விற்பனையும் நடக்கிறது. சொத்து பற்றிய விவரங்களை குறிப்பிட்டு முன்பதிவும் செய்யப்படுகின்றன. அப்படி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து சொத்து வாங்குவதாக இருந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சொத்து பற்றிய ஆவண விஷயத்தில்  கவனமாக இருக்க வேண்டும். 

ஆவண சரிபார்ப்பு 

இணையதளத்தில் நகல் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அவை சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும். முக்கியமாக தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ், திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை அலசி ஆராய வேண்டும். அவற்றின் ஒரிஜினல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது நல்லது. 

 மேலும் அந்த இடம் எந்த பகுதியில் இருக்கிறது? அதனை சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு வசதிகள் என்ன? வீடு வாங்குவதாக இருந்தால் அதன் கட்டுமான தரம் எப்படி இருக்கிறது? காற்றோட்டமான சூழலில் அமைந்திருக்கிறதா? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். வீட்டுமனையாக இருந்தால் வளர்ச்சி அடைந்த பகுதியில் அமைந்திருக்கிறதா? அல்லது விரைவாக வளர்ச்சி அடைவதற்கான அறிகுறி இருக்கிறதா? மண்ணின் தன்மை எப்படி இருக்கிறது? என்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். 

முன்பணம் செலுத்துவதில் கவனம்

மேலும் வீட்டை கட்டித்தரும் கட்டுமான நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்வதும் முக்கியம். அந்த கட்டுமான நிறுவனம் இதுவரை கட்டமைத்த கட்டுமான திட்டங்களை பார்வையிட்டு தெளிவுப்படுத்திக்கொள்வது நல்லது. அதைவிட முக்கியமாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதாக இருந்தால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நன்றாக படித்து பார்த்து தெளிவுபடுத்திக்கொண்டபின்பு பணம் செலுத்துவது நல்லது. 

 ஏனெனில் உங்களுக்கு வீடு பிடிக்கவில்லை என்றால் கட்டிய முன்பணத்தை திருப்பி தருவார்களா? வீட்டை புக்கிங் செய்வதற்கு காலதாமதம் செய்தால் பணம் பிடித்தம் செய்வார்களா? எவ்வளவு தொகை பிடித்தம் செய்வார்கள்? என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம். சில நிறுவனங்கள் முன்பணத்தை திருப்பி தர மறுக்கலாம். எனவே ஏதாவது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு 
விவரங்களை கேட்டறிவது நல்லது

இணையதளம் மூலம் சொத்து வாங்கப்போகிறீர்களா?||WebsiteByPropertyBuying

Friday, June 12, 2015

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற

20 hrs · 
இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.
இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/…/birthCertificateList…
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற -http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateBasi…
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateList…
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php…
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php…
மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு -https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் -http://tirunelvelicorp.tn.gov.in/download.html

Friday, June 5, 2015

ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்

Sunday, May 17, 2015

கலவியல் வக்கீரங்கள்!

undefined
"அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது." - ஸிக்மண்ட் ஃபீராய்டு [Sigmund Freud - மனத்தத்துவ ஆராய்ச்சியாளர்]

புணர்ச்சியின் வரம்பற்ற நிலைகளே மனிதனின் இயல்பென்றும், அதுவே நாகரிக மனிதனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்றும், சமூகத்திடம் கட்டுப்பாடுகளை கட்டுடைக்க முற்படும் போது முதல் கட்டுடைப்பு பாலுணர்வுக்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என்பதே. அதுவே மனித நாகரீகத்தின் அந்தஸ்துக் குறியீட்டாகவும் (Status symbol) சிலர் நினைக்கின்றனர். அதன் வீரியம் எந்தளவுக்கு ஒரு சமூகத்தை தாக்கத்திற்கு உள்ளாக்குகிறது என்பதை அனுபவம் சொல்லும் போது, கோட்பாடுகளை கட்டுடைப்புகள் வரைமுறைக்குள் மீண்டும் கொண்டு வருகிறது; நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அறநெறி.

வாழ்வில் எழுதப்படாத சட்டங்களாக மனித குலத்தின் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்லும் அறநெறிக் கோட்பாடுகளுடன் மனிதன் முரண்படும் போதெல்லாம் தோற்றுக் கொண்டே இருக்கின்றான். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்தில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு விதிக்கப்பட்ட தடை...

என்றாயிற்று கலிபோர்னியாவில்?

கலிபோர்னியாவையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் பற்றி பேசுவதற்கு முன் மனிதன் என்பவன் யாரென்றும், அவனுடைய செயல்பாடுகளையும் கொஞ்சம் பார்ப்போம்.

"கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கடற்கரையோரத்தில் ஆழங்குறைந்த நீரில் சூரிய ஒளிக்கதிர்களின் தொடுகை விசேஷத்தால் சில மூலக்கூறுகள் இணைந்து புரதத் துகள் ஒன்று உருவாகிறது. அத்துகல்களில் இருந்த மூலக்கூறுகள் இரண்டாயிற்று, நான்காயிற்று, எட்டாயிற்று..."

இப்படியே அதன் தன்னாற்றல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த தன்னாற்றலில் இருந்தே (உயிரற்ற மூலங்கள்) உயிர் இயக்கம் கொண்ட வஸ்து உருவாகிறது. இந்த புரதப் பிண்டமே "உயிர் வர்க்கத்தின் தொடக்கம்" என்று விஞ்ஞானம் சொல்கிறது.

நீரில் தோன்றிய உயிர்த்துகளே கோடான கோடி ஆண்டுகளுக்கு பின் அமீபாப் பூச்சியாகவும், பின் மீனாக, தவளையாக, பறவையாக, பாலூட்டும் மிருகங்களாக, மனிதனாக பரிணாமம் அடைந்திருக்கிறது.

"விஞ்ஞானத்தில் மனித பரிணாமத்தை குறித்து ஓர் வரைப்படம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம். அதில் பல கிளைகள். மரத்தை உயிராகவும், அதிலிருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு கிளை பறவைகள், மற்றொரு கிளை பாலூட்டும் பிராணிகள், ஒரு கிளை மனித இனம். இப்படி உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதை உணர்த்தும் வரைப்படம்.

"அமீபாப்பூச்சியில் பாக்டீரியாவில் துடிக்கும் உயிரே மனிதனுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது" என்று விஞ்ஞானம் உயிர்தோற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. மனித இனம் எப்போதுமே சோதனை செய்தல், தவறை உணர்தல், மீண்டும் சோதித்தல் என்ற முறையைப் பின்பற்றியே (Trial and error) முன்னேறி வந்துள்ளது. "அமீபா மனிதனின் குளறுபடிகளை"த் தான் நாம் வரலாறுகளாகவும் பார்க்கிறோம். எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்தாலும் அமீபா மனிதனின் ஆக்கிரமிப்பாகிய மூர்க்கத்தனத்தை மாற்ற முடியாமல் இருக்கிறது. எங்கே தவறு நடந்திருக்கிறது? வரலாற்றை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த கால எச்சங்களில் எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டுவருகிறோம். அப்படித்தான் ஓரினச்சேர்க்கையையும் ஆராய வேண்டியுள்ளது. "அமீபா மனிதனின் மன வக்கீரங்கள்" காமத்தில் மிருக நிலைக்கும் கீழே போய்விட்டது. ஆதிகால மனிதன் "கற்பு" என்ற சொல்லுக்கு அர்த்தம் உருவகப்படுத்தாத காலகட்டத்தில் உடன் பிறந்த சகோதிரிகளையும், பெற்ற தாயையும், மகனையும், மகளையும் புணர்ந்தார்கள்.

யாச்சோபின் என்ற வரலாற்று ஆய்வாளர் மதம் தோன்றுவதற்கு முன்பு இருந்த சமூக நிகழ்வுகளை, சராசரியாக பண்டைகால மக்களிடம் காணப்பட்ட விசித்திர வழக்கங்களை ஆதரங்களுடன் விளக்குகிறார். ஓடின் தன் மகள் பிரிக்காவுடன் இணைந்தது வம்ச விருத்திக்காக.

எகிப்திய நாட்டு தேவன் தன் தாயை மணந்ததும், லீசியார், எட்ருஸ் கானர், சிரீட்டர், அத்தீனியர், லெஸ்பெயின்கள், எகிப்தியர்கள் முதலியவர்களுக்குள் பலர் பலருடனும் புணர்ந்து வந்திருக்கின்றனர்.

மதம் தோன்றிய காலகட்டத்தில் பாபிலோன் நகரித்தில் பெண்கள் பருவமடைந்தால் ஏதேனும் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தில் யாராவது ஓர் ஆணுடன் சேர்க்கையில் ஈடுபட்டு தன்னுடைய கன்னித்தன்மையை அழித்துக் கொள்ளும் சடங்கை புனிதமான மதச்சடங்காக கருதி இருக்கின்றனர்.

மெம்பிஸ், அர்மீனியா, டயர்சி, டோன் - போன்ற பிரதேசங்களிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாக யாச்சோபின் குறிப்பிடுகிறார்.

லிபியனைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களுடன் இணைந்து திருமணத்திற்கு கொடுக்க வேண்டிய சீதனத்தை சம்பாதித்ததாகவும் காணப்படுகின்றது. யார் அதிகமான சீதனங்கள் வைத்திருக்கிறார்களோ அப்பெண்களையே மணக்க விரும்பி இருக்கின்றனர் ஆண்கள். திருமணத்திற்கு பிறகு மற்ற ஆண்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. தாரசிய இனத்தினருக்குள்ளும் இவ்வழக்கம் இருந்திருக்கிறது.

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசி விபச்சாரத்தில் சேர்த்த பணத்தில் தனக்கென ஒர் பிரமீட் (Pyramid) கட்டியதாக வரலாறுகள் உண்டு.கி.மு 66-இல் அரேபிய நாட்டில் அண்ணன் தங்கைகளிடம், தாய் மகன்களிடம், புணர்ச்சியில் ஈடுபட்டதாக ஸ்ட்டாபோ என்ற வரலாற்று அறிஞர் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

வம்ச விருத்திக்காகவும், முறைக்கேடான முறையில் புணர்ச்சிகள் இருந்திருக்கின்றன. பின் ஓரளவு நாகரிகமடைந்த மனிதன் தாயையும், சகோதரியையும், மகளையும் புணர்வது அநாகரிகமானது என தவிர்த்தான். குழுக்களாக சிறு சிறு இனங்களாக திரிந்த மனிதக் கூட்டங்களை அரசாட்சிகள் ஆள ஆரம்பித்த கட்டங்களில் கூட மனிதனின் காமப்பசி வேறு திசைகளில் திருப்பி விடப்பட்டது.

ஆக்கிரமிப்பு வேகமும் (Aggressive Instinct) காம வேகமும் (Sex Instinct) வன்முறைகளாகவும் மாறி இருக்கிறது. இலியது - கிரேக்க காவியத்தில் பார்த்தோமானால் பாரிஸ் என்னும் ட்ராய் (Troy) இளவரசன் அக்கேய கிரேக்கர் தலைவனாகிய மெனிலாஸின் என்பவனின் மனைவி ஹெலன் மீது ஏற்பட்ட காமத்தால் கடத்திச் செல்ல, ஆத்திரமடைந்த கிரேக்கர்கள் ஆயிரம் போர்க்கப்பல்களில் சென்று ட்ராய் நகரத்தை முற்றுகையிட்டு 10-ஆண்டுகள் யுத்தம் செய்து லட்சக்கணக்கில் போர் வீரர்கள் இறந்து, இறுதியில் ஹெலன் மீட்கப்பட்டாள். பின் ட்ராய் நகரத்தையே தீ வைத்து அழித்தனர் கிரேக்கர்கள். இவை பெண் ஆக்கிரமிப்பால் நடந்த வரலாற்றுப் போர்களில் முதலாவதாக சொல்லப்படுகிறது. இராமாயணக் கதைகள் எல்லாம் இதற்கு பிறகு நடந்திருக்கிறது. இராமாயணமும், மகாபாரதமும் உடாண்ஸ் காவியம். அப்படி ஒரு நிகழ்வுகள் நடந்திருக்கவே முடியாது என்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பது போன்று டராய் நகரச் சம்பவங்களும் கற்பனை என்றும் சொல்லுவதுண்டு. ஆனால் ஹெலனின் கற்பைச் சோதிக்க கணவன் மெனிலாஸின் நெருப்பில் இறங்கச் சொல்லியிருக்க மாட்டான் என்று நம்புவோமாக...

நம்நாட்டில் இராமாயணமும், மகாபாரதமும் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவை இரண்டு பெண்கள். சீதையை அக்கிரமித்ததற்காக எழுந்த போர் இராமாயணம். திரெவுபதியை சேலையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியதில் தொடங்கியது மகாபாரதப் போர். வக்கீரக்குணம் எல்லை மீறும் போது அங்கே அறநெறி ஆவேசப்படுகிறது. இவை மனித வாழ்க்கை முழுவதும் எழுதப்படாத சட்டமாக இயங்குகிறது அல்லது சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணங்கள்.

மனிதன் ஒரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கோட்பாடுகள் வேறொரு காலத்திற்கு அநாகரிகமாகவும், விமர்சனத்திற்கும் உள்ளாவது போல் மனிதனின் பால் உணர்வுகளை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று முதன் முதலாக வலியுறுத்தியவர்கள் யூதமதத்தைச் சார்ந்தவர்களே. தாய், மகன், மகள், தந்தை குறித்த உறவுகளுக்கென்று பண்பை உருவாக்கியது யூத மதம். தாய் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்பட்டாள். இவையெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்கள்.

மோசஸ் உருவாக்கிய பத்துக்கட்டளைகள் யூத மக்களிடம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியது. அய்ரோப்பாவில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பு செல்த் (Celte), த்யூத் (Druide) போன்ற மதங்கள் இருந்தன. அக்காலக்கட்டங்களில் குறுநில மன்னர்களையும் விட மதகுருமார்களிடம் செல்வாக்கு அதிகமிருந்தது. மன்னர்களுக்கு அலோசனைகளை வழங்குவதும் மதகுருமார்களே. மன்னர்கள் போர்க் காலங்களில் வேற்று நாட்டுக்கு செல்லும் போது அதிகாரங்கள் மதவாதிகளிடம் இருந்தன. பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் மனைவிமார்களை விட்டு வெளியூருக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் இதர ஆண்களோடு கலவிச் சேர்க்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக இரும்பினால் ஆன உள்ளாடையை [ஜட்டி மாடலில்] போட்டு பூட்டி வைக்கும் வழக்கமும் ஏற்பட்டன. மன்னர்களும், சீமான்களும் இம்முறையைக் கையாண்டனர். தங்கள் வாரிசில் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தீவிரமான முறைகளை கடைப்பிடித்தனர். அந்தப்புரத்தில் இருக்கும் காவலாளிகள் அங்கிருக்கும் பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்குறிகள் வெட்டப்பட்டன. 10-இல் 3-பேர்கள் பிழைப்பதே மிக அரிதானதாக இருந்தன.

அதே போல் போர்க்களத்தில் இருந்த வீரர்கள் நெடுங்காலமாக புணர்ச்சியில் ஈடுபடாததால் தங்களுடன் இருந்த வீரர்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். ஓரினச் சேர்க்கை அதிகரிக்க இவையும் ஒரு காரணமாகும். இன்றும் கூட சிறைக்கைதிகளும், இராணுவத்தில் இருக்கும் வீரர்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வழக்கத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஓரினச் சேர்க்கை தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுவது உண்டு.

ஆடையில்லாமல் வாழ்ந்த மனிதன் தன் உடலை அழகுப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் வந்த போது தன்னை அழகுப்படுத்தி இரசிக்க ஆரம்பித்தது நாளடைவில் தன்னைப் போன்றே அழகுணர்ச்சியுடன் அழகுப்படுத்திக் கொண்டுள்ள மனிதனிடம் ஏற்பட்ட அதீத ஈர்ப்பும் அதை இரசித்துப் பார்த்தும் தடவிப் பார்த்ததிலும் ஏற்படுத்திய சிலிர்ப்புகளில் புணர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் சொல்லுவதுண்டு.

கிரேக் ஆண்டிக் இனத்தினர் முதல் முதலாக தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகின்றது. இக்காலகட்டத்திலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருந்திருக்கின்றனர். ஆண் ஆணை புணர்வதும், பெண்ணை பெண் புணர்வதும் அல்லது சில ஆண்களுடனும் பெண்களுடனும் இணைந்து புணரும் இருபால் சேர்க்கையும் தோன்றியது. ரோமபுரி நாட்டிலும் அடுத்து அரபு நாடுளிலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் இருந்திருக்கிறதாக வரலாறுகளில் காணப்படுகின்றன.

அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண் உலகம் முழுவதும் தன் செல்வாக்கால் கிறிஸ்துவ மதம் பரவ காரணமாணவன். உலகத்தையே தான் காலடிக்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்காரத்துடன் திரிந்தவன். தன் செல்வாக்கை பல தவறான வழிகளில் பயன்படுத்தி மோசமான அடையாளத்தை வரலாற்றில் பதிவு செய்தவன். அளவுக்கு அதிகமான பெண்களை அனுபவித்து அனுபவித்து சலித்துப் போய் முதல் முதலான ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட ஆரம்பித்தான். வரலாற்று ஆதாரப்படி உலகில் இவனே ஓரினப்புணர்ச்சியில் முதல் ஆளாய் அடையாளப்படுத்தப்படுகிறான்.

பால் புணர்வுகள் கட்டுக்குள் அடக்கப்பட்ட காலக்கட்டங்களில் பெண்கள் மீதும் அதிக திணிப்புகளும், ஆதிக்கமும் செலுத்த ஆரம்பித்த காலகட்டங்கள் அவை. அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண் பெண்களுடன் புணர்ச்சி செய்வதில் வெறுப்பேற்பட்ட பின், பெண் சேர்க்கையில் அதீக ஆர்வம் காட்டினால் பிசாசு பேய் புகுந்திருப்பதாக உயிரோடு நெருப்பில் போடப்பட்டாள். அதற்கு காரணமானவன் அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண்.

இப்படி அனேக யுத்தங்கள் முறையற்ற காமத்தாலும், வன்மையாலும், ஆக்கிரமிப்பாலும் நடைப்பெறுவதும், மறுபுறம் பொது மக்களிடமும் தீராக் காமமும், அதனால் நடக்கும் அடிதடிகளையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த மனவியல் ஞானி ஸிக்மண்ட் ப்ராய்டு.... "காம வேகமும், ஆக்கிரமிப்பு வேகமும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் உந்து சக்திகளுக்குள் முதன்மையானது" என்றார். முதலில் இக்கோட்பாட்டை ஏற்க மறுத்தது மருத்துவ உலகம். ப்ராய்டு கிண்டல் செய்து பழிக்கப்பட்டார். நாளடைவில் அக்கோட்பாட்டின் பலத்தை மனஆராய்ச்சி செய்யும் மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது. இன்று Psychatry என்னும் மனநோய் சிகிச்சை மருத்துவம் பெருவளர்ச்சி அடைந்திருக்கிறது.

[2]

"இயற்கையின் பரிணாம சக்தியின் மாபெரும் படைப்பு மனிதனை உருவாக்கி வைத்திருப்பது. மனிதனின் உடல்கூறு வேகமும் [Somatic], மரபுக்கூறு வேகமும் [Genetic] ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதே, இன்றைய ஆராய்ச்சியின் மையப்புள்ளி." - [Jonas calk, உயிரியல் ஆராய்ச்சிப் பேரறிஞர்]

அமீபா மனிதனின் ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலை காலத்தில் மனிதர்களுக்குள் வளர்ந்த பகுத்தறிவுச் சிந்தனை புணர்ச்சிகளை வரையறுக்குள் கொண்டுவந்தது. கட்டுப்பாடுகளை மீற முற்பட்ட மனிதன் சமுகத்திற்கு தெரியாமல் தன் இச்சைகளை தீர்த்துக் கொள்ள முனைந்தான். சட்டங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் அத்துமீறல்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டன. தண்டனைகள் ஒவ்வொரு சமுகத்திலும் [நாடுகளில்] அவரவர் கடுமையான சட்ட விதிகளின்படி மனிதன் தண்டிக்கப்பட்டான். ஆகையால் மனிதனின் செயல்பாடுகள் கட்டுக்குள் இருந்தன. புணர்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மனிதனை பல்வேறு தவறான அணுகுமுறைக்கு கொண்டுச் சென்றது.

மருத்துவ உலகம் புணர்ச்சிகளில் இயற்கைக்கு முரணானது, எதிரானது போன்ற கோட்பாடுகளை, மதம் போல் முன்வைக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்புக்களையும், மனிதனின் சிந்தனைகளில் தூண்டும் வன்மமும், குரூரமும் குறித்து எச்சரிக்கை செய்கிறது. மனிதனின் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் வரம்புக்கு மீறிய புணர்ச்சி உணர்வுகள் கேடானது என்கிறது. புணர்ச்சியாளர்களை மருத்துவ உலகம் மூன்று வகைப்படுத்துகிறது.

1.ஆணும், பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடுவது.

2.பெண்ணும் பெண்ணும் [Lesbian] அல்லது ஆணும் ஆணும் புணர்ச்சியில் ஈடுபடுவது [Homo Sex

3.ஆண்கள், பெண்கள் என இருபால்உணர்ச்சியாளர்களும் [bisexuals] இணைந்து குரூப் செக்ஸில் ஈடுபடுவது [group sex] ஹோமோ [ஹோமோ] என்ற வார்த்தை கிரேக்க மொழியாகும். 'Homo' என்றால் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம்.

மருத்துவ உலகம் குறிப்பிட்ட 3-புணர்ச்சி வகைகளையும் மீறி பலவகைகளில் அதிகரித்துப் போய்விட்ட புணர்ச்சிகளுக்கு என்ன குறியீடு வைப்பது என்று தடுமாறிப் போய்விட்டது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உளவியல் நிபுணரான கார்ல் மரியா பென் கெர்ட், ஹோமோ செக்ஸ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். கிரேக் நாட்டில் இருந்த லெஸ்போஸ் [Lesbos] என்ற தீவில் கி.மு 7-ஆம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் சேர்க்கையில் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞரான 'ஸாப்போ' என்பவர் அத்தீவு குறித்தும், பெண்களின் சேர்க்கை குறித்தும் எழுதி இருந்த கவிதைகளில் 'லெஸ்போஸ்' என்ற வார்த்தை அதிகமாக காணப்பட்டது. அவையே பின்னாலில் பெண்கள் ஒரினச்சேர்க்கைக்கு "லெஸ்பியன்" என்ற குறியீட்டு சொல்லாக வழக்கத்துக்கு வந்தது.

கிரேக், ரோம் போன்ற நகரங்களில் ஒரினச்சேர்க்கை தவறாக பார்க்கப்படவில்லை. கி.மு வரை இந்நிலைமையே இருந்து வந்தது. கி.பி4-ஆம் நூற்றாண்டுக்கு பின் ஒரினச் சேர்க்கையாளர்கள் மீது இருந்த அங்கீகாரம் இந்நாடுகளில் மாறத் தொடங்கியது. இயற்க்கைக்கு புறம்பான பாலீயல்கள் பாவகரமான செயலாக கூறியது மதம்.19-ஆம் நூற்றாண்டில், "ஒரினச்சேர்க்கை என்பது மனநலம் பாதிக்கும் உறவானது மட்டுமல்லாமல் உடல்நலத்திற்கு கேடானது என்றும், பல தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடியதும், மனவக்கீரங்களை அதிகரிக்கச் செய்து மனிதர்களை கட்டுப்பற்றவர்களாக மாற்றச் செய்து சமூகத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்" என்று மருத்துவ உலகம் சொல்லிவிட்டது.

இக்காலக்கட்டங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த மாவீரன்நெப்போலியன்1804-ஆம் ஆண்டில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறல்ல என்று சட்டம் கொண்டு வந்தார். [நெப்போலியன் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்] ஐரோப்பாவில் மக்களாட்சி வந்த போது சட்டங்கள் மாற்றப்பட்டன. அதில் ஒரினச்சேர்க்கை குற்றமாக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து - போன்ற நாடுகளில் ஒரினச்சேர்க்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கபுரி என அழைக்கப்படும் நாடு "ஸ்பென்." 1975-இல் பிரான்சிஸ்கோ பிரான்கோவின் மறைவுக்கு பின் [இவர் இராணுவ ஆட்சி என்னும் பெயரில் சர்வாதிகாரத்தனத்தில் ஆண்டவர்] ஜனநாயக ஆட்சியில் 1979-ஆம் ஆண்டு செக்ஸ் சுதந்திரத்திற்கு அதிக உரிமை கொடுக்கப்பட்டது. ஓரினச் சேர்கையாளர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் அளித்தது.

நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளுக்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டது. ஸ்பெயினில் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரம் பெற்றது ஓரினச்சேர்க்கை. கத்ரோலிக்கர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் அவர்களின் எதிர்ப்புக் குரல் பெரியதாக ஒலிக்கவில்லை. 1985-க்கு பின் ஸ்பெயினில் கூட்டுக் கலவி [Bisexual] புணர்ச்சிகள் அதிகரித்தது. ஈஸ்டர் கார்சியா என்னும் அரசியல் ஆய்வாளர் ஸ்பெயினில் பொருளாதாரத்தை விட செக்ஸ்சில் அதிக சுதந்திரம் இருக்கிறது. இவை மக்களுக்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும் சிந்தனையையும் சிதைத்துவிடக்கூடும் என்று எச்சரித்தார். அவர் கூற்றுப்படியே அதிக சுதந்திரம் குரூப் செக்ஸ் வரையில் அதிகரிக்கச் செய்த போது அரசாங்கம் விழித்துக் கொண்டது.

ஸ்பெயின் பிரதமரான ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் சமுதாயச் சீர்திருத்த நடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்ற போது "சமுதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச் சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மக்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட கூட்டுக்கலவி [Bisexual] முறையில் வெளிப்படையாக பேச இயலவில்லை. அமீபா மனிதனின் உச்சகட்ட வெறித்தன்மையாக கூட்டுக்கலவியின் ஆண் பெண் இருபாலரின் புணர்ச்சிகளை குறித்து மருத்துவ உலகம் கடும் விமர்சனங்களை முன் வைத்ததும் ஒரு காரணம்.

ஆணுடன் ஆண்; பெண்ணுடன் பெண் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை திருமணங்கள், அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளின் மனநிலைகள் குறித்து அதிகம் விவாதத்திற்குள்ளானது. ஸ்பெயின் பிரதமரான ´ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ்´ சமூதாயச் சீர்திருத்தநடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்றபோது, "சமுதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தைமுடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஓரினச் சேர்க்கையாளர்களின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை மறுபரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஸ்பெயின் சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரினச்சேர்க்கையின் திருமணத்தை ஆதரிக்கும் போது நாளை கூட்டுக்கலவியாளர்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் நடக்கிறது. அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கும் போது நாங்கள் இருபால்புரணர்ச்சியாளர்கள்; ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாடு மனித உரிமை மீறல் யார் யாரோடும், எத்தனை பேரோடும் இருபாலுணர்ச்சிகளில் புணர்வதற்குசட்ட அங்கீகாரம் கோரினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியில் ஸ்பெயின் அரசாங்கம் குழம்பிப் போய்கிடக்கிறது. அப்படி யாரும் இன்னும் தைரியமாக முன் வந்து வாதங்களைவைக்கவில்லையானாலும் நாளை என்ன நடக்குமோ?

ஸ்பெயின் நாட்டின் கதை இப்படி போய் கொண்டிருந்தால் கனடாவை கொஞ்சம் நோட்டம் விட்டு வைப்போம்...

2003-இல் கனடாவில் பிரதமாக இருந்த ஜான் கிறச்சியன் ஐரோப்பாவில் சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிப்பட்டுள்ளதைப் போல் கனடாவிலும் விரைவில் ஓரினச்சேர்க்கைக்கு சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த போது கட்சிக்குள்ளிருந்தும் பொது மக்களில் பெரும்பான்மையோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கம் போல் கட்சிக்குள் கருத்துப்பிளவுகள். ஆனால் தற்போதைய பிரதமரான போல் மார்ட்டின் - ஜான் கிறிச்சியன் கருத்தை ஆதரித்தார்.

2003-இல் நிறைவேற்ற முடியாத தீர்மானத்தை போல் மார்ட்டின் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தினத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பதுப்பற்றி கருத்துக்கணிப்பும் நடைப்பெற்றது. கருத்துக்கணிப்பு நடைப்பெறுவதற்கு முன்பே கனடாவில் 10-மாநிலங்களில்AlbertaOntarioNova ScotiaOntarioNewfoundland Labrador,  ManitobaBritish ColumbiaQuebec- ஒரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது.

பிரான்சில் சில வருடங்களுக்கு முன்பு போர்தோ என்னும் இடத்தில் பேகல் என்ற ஊரைச் சேர்ந்த மேயர் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்ததால் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சிறை தண்டனை கொடுத்த சம்பவமும் உண்டு.

ஒரினச் சேர்க்கையாளர்களின் சமஉரிமைப் பிரச்சனைகளும், சட்ட ரீதியான அங்கீகாரமும் ஒவ்வொரு நாட்டிலும் தலையை எதிலாவது முட்டிக் கொள்ளத் தோன்றும் அளவுக்கு மிஞ்சிப் போகிறது. அட, "பரவாயில்லையப்பா நம் நாட்டில் இதெல்லாம் கிடையாது என்று நிம்மதி மூச்சு விடுபவர்களுக்காக"....

"இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10-ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்" *[இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு:377]

இச்சட்டம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் பிரச்சனையை கிளப்பியது. இச்சட்டத்தை எதிர்த்து டெல்லியில் இருக்கும் 'நாஸ் அறக்கட்டளை' உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்தியச் சட்டம் 377-இப்பிரிவின்படி அதிகப்பட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வரை வழங்கலாம். இந்தியாவில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இச்சட்டம் அநீதி இழைப்பதாக கூறியுள்ளது.எழுத்தாளர் விக்ரம் சேத், நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென், அருந்ததி ராய் உள்பட மற்றும் சிலர் இந்தியச் சட்டம் 377-குறித்து விமர்சனங்களை வைத்தனர். இச்சட்டத்தினால் அரவானிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடியதாக இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

2006-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மட்டும் 24-லட்சம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இதில் எட்டு சதவிதத்தினரை மட்டுமே அடையாளங் காணமுடிவதாக சொல்லப்படுகின்றது. இந்தியாவில் முதல் முதலாக ஓரினச்சேர்க்கைக்கு எதிரான இந்தியச்சட்டப் பிரிவு 377-ரத்து செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை - மத்திய சுகாதார பிரிவு, குடும்ப நல துறையும் கலந்தாலோசித்தன. முடிவில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-தடை செய்யப்பட்டது. ஆனால் ஒரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சென்ற வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இரு பெண்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களே இந்தியாவில் முதலாவதான ஒரினச்சேர்க்கை தம்பதிகள்.

நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தைரியமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் ஒரினச் சேர்க்கையாளர்கள் குறைவு தான். அதே போல் கூட்டுக்கலவி பற்றி பேசும் இருபால்புணர்ச்சியாளர்களில் ஆண்கள் துணிந்து கூட்டுக்கலவி பற்றி பேசினாலும், இந்தியாவிலும் உலகில் இதர பகுதிகளிலும் அதில் ஈடுபடும் பெண்கள் தங்களை இருபால் புணர்ச்சியாளர்கள் என்று துணிந்து சொல்வதில்லை. இப்படி ஓரினச்சேர்க்கையை குறித்தும், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் அதிகம் தற்போது பேச வைத்ததற்கு காரணம், "கலிபோர்னியாவில் அண்மையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணச் சட்டத்தை ரத்து செய்தது."

"ரத்து செய்யும் உரிமையை அரசாங்கம் எடுக்கவில்லை." மக்களின் ஓட்டெடுப்பில் விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. 20-வருடங்களுக்கு முன்பு இதே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் மற்றும் சிறுவர்களை தத்தெடுத்து வளர்க்கும் போக்குகள் குழந்தைகளின் மனநலம் குறித்த விவாதங்கள் ஒரினச்சேர்க்கையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அதிகமான விவாதங்கள் எதிர் காலம் குறித்த எச்சரிக்கை உணர்வுகள் ஒரினச்சேர்க்கையாளர்களை தனி மனித சுதந்திர உணர்வுகளை நாங்கள் தலையிடவில்லை. ஆனால் சட்டரீதியான அங்கீகாரங்கள் அளிப்பதை எதிர்க்கிறோம் என்கின்றனர்.

இப்படி கலவியல் பிரச்சனைகள் பெரும் பிரச்சனையாக சமூகத்தை ஊடுறுவி நிற்கும் போது, மனிதனுக்குள் இருக்கும் "அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது" என்று ஸிக்மண்ட் ஃபீராய்டு சொல்லியவைகளை நாம் கடக்க வேண்டியிருக்கிறது!

கலவியல் வக்கீரங்கள்!

பிரிவு : உளவியல்--> பாலியல்

Welcome to Tamizachi Author Website

Welcome to Tamizachi Author Website

Saturday, May 9, 2015

பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?

பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.
 யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?
‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும்   விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும்  விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும்.
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY)  இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர்  18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச்  சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற   2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.
 ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம்.  தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.
 எப்போது சேரலாம்?
2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால்  அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில்  இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில்  இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும்.
பொதுவாக,  இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள்  இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்,  எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தரத் தேவையில்லை.
 என்ன வேண்டும்?
இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். மற்றவகையான வங்கிக் கணக்கை வைத்து இந்த  இன்ஷூரன்ஸ் திட்டங்களில்  இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித்தால், அந்த மனு நிராகரிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன.  சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.
 விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?
இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.
 பிரீமியம் செலுத்துதல்!
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான்.
மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.
ஆனால்  ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும்.
இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.
 ரெனீவல் செய்வது!
நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.
 யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.
 எவ்வளவு க்ளெய்ம்?
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும்.
விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும்.  வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.
சுரக்‌ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும். 
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
 எப்போது காலாவதி?
கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான  பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.
நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.
பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய்    வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு  ரூ.1  லட்சம் கவரேஜ் வழங்குகிறது.
பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு 
165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது.  அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம்.  குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங்களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்!