Sunday, April 26, 2015

அரசு கெஜட்டில் பெயர்மாற்றம் செய்வது எப்படி

அரசு கெஜட்டில் பெயர்மாற்றம் செய்வது எப்படி?
*********************************************************
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்,
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: 
உதவி இயக்குநர் (வெளியீடுகள்), 
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், 
சென்னை-600 002 
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படி பெறுவது?

அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

http://www.stationeryprinting.tn.gov.in/forms.htmவிண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
***************************************************************************************************************
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்

Saturday, April 25, 2015

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
**********************************************
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்! 

http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம். 

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:


1. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
2. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
3. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
5. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
6. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

ஆன்லைனில் வில்லங்கச்சான்று பெறுவது எப்படி?

ஆன்லைனில் வில்லங்கச்சான்று பெறுவது எப்படி?
*******************************************************************************

EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?

இணையத் தளத்தில் வில்லங்க சான்று..!

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை அனைத்தும்,1987 ஜன. 1க்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.

சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். 

பொதுவாக பலரும், 30ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கின்றனர். 

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் பதிவு 26 ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. 

அதற்கு மேல் வேண்டும் என்றால், தேடி கைப்பட எழுதித் தான் சான்றிதழ் தர வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். 

இதனால், வில்லங்க சான்றிதழ் பெறுவதில், பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.

Encumbrance Certificate
********************************

நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப் பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

EC (Encumbrance Certificate) வில்லங்கச்சான்றிதழ்:
**********************************************************************

ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் கீழ் கண்ட விவரங்கள் இருக்கும்.
1. சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண் 

மேற்கண்ட விவரங்களின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது என்ற முழு விவரங்களும் தெரியும். 

EC-யை வைத்தே தாய்பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அது வரை உள்ள எல்லா பத்திரங்களையும் நாம் சரி பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் நாம் வாங்க இருக்கும் சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் Registered Mortgage(பதிவுசெய்யப்பட்ட அடமானம்) செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரமும் இதில் தெரிந்துவிடும். 

சொத்து சம்பந்தமாக EC-ல் சில தகவல்கள் வர வாய்ப்பில்லை.
******************************************************************************************

1. 01.11.2009-க்கு முன்பு சொத்தின் உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்குயாரையாவது Power of attorney-யாக நியமித்து இருந்தால் அது EC-ல் வராது.

Power of attorney-ஐ பதிவு செய்ய புதிய முறையை அரசாங்கம் 01.11.2009-ல் இருந்து அமல்படுத்தியது. அதன்படி Power of attorney பதிவு விவரம் EC-ல்வரும்.

2. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் (Unregistered Agreement) போட்டு இருந்தால் அதுவும் EC-ல்வராது.

3. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவுசெய்யப்படாத அடமானம் (unregistered mortgage) வைத்திருந்தால் அதுவும் EC-ல் வராது.

மேற்கண்ட மூன்று விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பல மோசடிகள் நடப்பதற்கு இவை மூன்றும் காரணமாகி விடுகின்றது.

கைப்பட எழுதித்தரப்படும் சான்றிதழ்
EC பெறுவது எப்படி? 

சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெறலாம். 

01.01.1987-ல் இருந்து தான் Computer மூலம் EC பெற முடியும்.
***********************************************************************************

அதற்கு முன்பு Manual ECதான்.01.01.1987-ல் இருந்து EC தேவைப்படும் பட்சத்தில் இணைய தளத்தின் மூலமும் விண்ணப்பம் செய்து பெறலாம் 

இணைய தளத்தின் முகவரி www.tnreginet.net
*****************************************************************

இந்த வசதி தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த சேவை இருக்கிறது என்ற விவரம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது சென்னை இராஜாஜி சாலையில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் EC பெறலாம்.

விண்ணப்பத்தில் 

1.விண்ணப்பம் செய்பவரின் பெயர், 
2.முகவரி, 
3.சொத்து விவரம்
4.மற்றும் கிரையப்பத்திர விவரம்

முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும். 

இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவருக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும்.
அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும்
.
அதற்கு என்ன செலவாகும்?
*******************************************

பத்து ஆண்டுகளுக்கு என்றால் முதல் ஆண்டிற்கு ரூ.15 ம், பிறகு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.11 வசூலிக்கப்படும்.

கம்ப்யூட்டர் முறையில் எடுத்துதரப்படும் நகல் பதிவு செய்யப்படாத அதாவது EC-ல் entry வராத, சொத்து சம்பந்தமான நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்பதற்கு மற்றொருவரை Power of Attorney-ஆக 2005-ல் நியமனம் செய்திருந்தார். Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பதற்கு காலம் தாழ்த்தவே சொத்தின் உரிமையாளர் அவருக்கு தெரியாமல் Power of Attorney-யை ரத்து செய்துவிட்டார். 

இதை மறைத்தோ அல்லது தெரியாமலோ Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பனை செய்வதற்காக மற்றொருவரிடம் முன் பணம் வாங்கி கிரைய ஒப்பந்தம் (Sale Agreement)செய்து விட்டார். 
சட்ட ரீதியாக இது செல்லுபடியாகாது. 
சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவருக்கு சொத்தை விற்றுவிட்டார்.

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி ?
***************************************************************************

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. 

பொதுவாகவே ஈ சி (EC – Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி.

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு.

இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். 

அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் 

அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். 

இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற –

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற –

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன் –

திருமணத்தை பதிவு செய்ய –

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர் –

சொசைட்டி ரிஜிஸ்டர் – 

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற –http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் ?

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் ?
*********************************************
உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது. 

இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 

உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையின் பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.

தொலைந்த ஆதார் அட்டை அல்லது அதன் பிரதியை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க கீழ்கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்: 

1. ஈ-ஆதார் ஆன்லைன் முகவாயிலுக்கு செல்லவும்.

2. ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவீடு விவரங்களை (பதிவு எண் மற்றும் தேதி நேரம், குடியிருப்பவரின் பெயர், மற்றும் பின்கோட்) நிரப்ப வேண்டும்.

3. மாறாக, உங்களுக்கு உங்கள் ஆதார் அட்டை எண் தெரிந்திருந்தால்,

4. மேலே உள்ள "I have" தேர்வில் உள்ள "Aadhaar" என்ற ரேடியோ பட்டனை அழுத்தவும்.

5. நீங்கள் பதிந்துள்ள கைப்பேசி எண்ணில் ஓ.டி.பி. (ஒன் டைம் பின்) கடவுச்சொல் ஒன்றை குறுந்தகவல் மூலம் பெறுவீர்கள்.

6. கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன் ஆதார் அட்டையின் பிரதியை தரவிறக்கம் செய்யும் தேர்வை நீங்கள் காணலாம்.

இந்த கோப்பு பி.டி.ஃஎப். வடிவத்தில் இருக்கும். மேலும் பாதுகாப்பிற்காக அது கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கப்பட்டிருக்கும்.

கடவுச்சொல் தெரியவில்லையே என பயப்பட வேண்டாம். உங்கள் பின் கோடே உங்கள் கடவுச்சொல்லாகும். அசலை போலவே அச்சிடப்பட்ட பிரதியும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.

நில அளவை தொடர்பான ஆவணங்களும், அலுவலகங்களும்

நில அளவை தொடர்பான ஆவணங்களும், அலுவலகங்களும்
************************************************************************
              நம் நாட்டில் பிரச்சனை என்று ஆரம்பிப்பது, அதிகபட்சம் நிலங்களை வைத்துத்தான். அந்த நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முன்பு வாங்குவது என்பது மிகுந்த சிரமமானது ஆகும். ஆனால், இப்போது அப்படி அல்ல. ஆன்லைன் மூலமாகவே அனைத்தையும் பெற முடியும். இருந்தாலும், அப்படிப் பெறும் ஆவணங்களை அதிகாரபூர்வமான ஆதாரங்களாக பயன்படுத்த முடிவதில்லை. எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நில ஆவணங்களை பெற்று அதனை நாம் பயன்படுத்துகிறோம்.

                நில ஆவணங்களில் எந்த வகையான ஆவணங்களை எந்த அலுவலகத்தில் இருந்து எப்படி பெறுவது?, அதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் யாரிடம் நாம் விண்ணப்பிப்பது?  போன்ற சந்தேகங்களுக்கு இந்தப் பதிவு விடை தருகிறது. படித்து பயன் பெறுங்கள்.

ஆதார் அட்டை பெறுவது எப்படி?

ஆதார் அட்டை பெறுவது எப்படி?
***************************************************

ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கைகளிலும் உள்ள  விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது.

ஆதார் அட்டை பெறத் தகுதிகள்:
இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது?
இந்தியாவில் வசிக்கும் யாரும் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் வசிக்கிறார் என்றால் புதுச்சேரியிலேயே விண்ணப்பிக்கலாம்.
தற்போது தமிழகத்தில் அரசு மையங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால். நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்படும். அதுவரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
சென்னையில் உள்ளவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
இதுதவிர அரசுப் பள்ளிகள் / தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மையப் பணியாளர்களையோ அணுகி விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டை பெற பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

ஆதார் அட்டை பெறத் தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.
1.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்களில் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
3.எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
என்ன விவரங்கள் சேகரிப்பார்கள்?
தேவையான ஆவணங்களைக் கொடுத்தபின் கருவிழிப்படலம், இரு கை விரல் ரேகைகள், புகைப்படம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண்தான் வழங்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலையறிய:
https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLinkஇந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும். 


ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரில் குறைபாடு:
ஆதாரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆதார் கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று நிரந்த மையத்தில் சரிசெய்துகொள்ளலாம்.
மேலதிக தகவலுக்கு:
புதுச்சேரியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 88070 82845, 97866 27066
தமிழகத்தில் கடலூரில் மட்டும் நிரந்தர ஆதார் மையம் உள்ளது. இதன் தொடர்பு எண்: 94861 43053
1800 300 1947 என்ற எண்ணில் தகவல் மையத்தை இலவசமாகத் தொடர்பு கொள்ளவும். இதில் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் பேசுவார்கள். விரைவில் தமிழும் கொண்டுவரப்படும்.
https://portal.uidai.gov.in/ResidentPortal/ getstatusLink ©ØÖ® http://uidai.gov.in/ இந்தத் தளங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

ஃபான் கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா!

ஃபான் கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா!
******************************************************
 இந்தியாவில் தற்போது ஏராளமானோர் பான் (பெர்மனன்ட் அகௌண்ட் நம்பர்) கார்டு வைத்துள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பான் கார்டின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடும் தெரிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே. எனவே பான் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது நல்லது.

 பான் என்றால் என்ன? 
பான் என்றால் இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்களாகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்த பான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

 பான் கார்டின் முக்கியத்துவம் 
ஒருவரின் வங்கி நடவடிக்கைகளை, அதாவது அவருடைய வரி கட்டுதல், டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் கிரெடிட்டுகள், அவருடைய வரி சேமிப்பு, சொத்து, அன்பளிப்பு மற்றும் எப்பிடி போன்றவற்றை அவர் வைத்திருக்கும் பான் கார்டு வருமான வரித் துறைக்குத் தெரிவித்துவிடும். எனவே இந்த பான் கார்டின் உதவியுடன் வருமானத் துறை ஒரு இந்திய குடிமகனின் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை மிக எளிதாகத் தெரிந்து கொள்ளும். 

பான் எண்களை எளிதாக தெரிந்து கொள்ள:
 எடுத்துக்காட்டாக ஒருவருடைய பான் எண்கள் ஏஎஃப்இசட்பிகே7190கே (AFZPK7190K) என்று வைத்துக் கொள்வோம். இதில் இருக்கும் முதல் மூன்று எண்கள் ஆங்கில எழுத்துக்களான ஏ முதல் இசட் வரையிலான எழுத்துக்களிலிருந்து கொடுக்கப்படும் 3 எழுத்துக்களாகும். நான்காவது எழுத்து எப்போதுமே பான் கார்டை வைத்திருப்பவரின் நிலையைக் குறிக்கும். பி என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அது ஒரு தனி நபரைக் குறிக்கிறது. ஒரு வேளை எஃப் என்று கொடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு ஃபர்மை குறைக்கும். அல்லது சி என்று குறிப்பிட்டிருந்தால் அது ஒரு கம்பெனியைக் குறிக்கும். ஹெச் என்று குறிக்கப்பட்டிருந்தால் அது இந்து கூட்டு குடும்பத்தை குறிக்கும். ஏ என்று இருந்தால் அது ஒரு ஏஓபியைக் குறிக்கும். டி என்று இருந்தால் அது ஒரு ட்ரஸ்டைக் குறிக்கும். ஐந்தாவது எண்ணான கே, பான் அட்டையை வைத்திருப்பவரின் இறுதிப் பெயர் அல்லது அவருடைய பட்டப் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும். அடுத்த நான்கு எண்கள் 0001 முதல் 9999 வரையிலான எண்களுக்குள் இருக்கும் வரிசை எண்களாகும். இறுதி எண்ணான கே, ஆங்கில எழுத்தில் இருக்கிறது. இது ஒரு சோதனை இலக்க எண்ணாகும்.

 பான் கார்டு முக்கியமா? 
ஆம். பான் கார்டு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய எல்லா பொருளாதார வங்கி நடவடிக்கைகளிலும் இந்த பான் எண்களைக் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம் என்று வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது. 

பான் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?
 பான் கார்டைப் பெற படிவம் 49ஐ நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிவம் 49ஐ, வருமான வரித் துறை அல்லது யுடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் ஆகியவற்றின் இணைய தளங்களான www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த படிவம் 49ஐ, ஐடி பான் சேவை மையங்கள் மற்றும் டிஐஎன் பெசிலிடேஷன் மையங்கள் போன்றவற்றிலும் கிடைக்கும். மேலே சொல்லப்பட்ட இணையதளங்களுக்கு சென்று பான் நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்தால்www.https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்திற்கு சென்ற உங்களது பான் கார்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் 
2. மெட்ரிகுலேஷன் சான்றிதழ் 
3. கல்லூரி சான்றிதழ் 
4. வங்கிக் கணக்கு அறிக்கை 
5. கிரெடிட் கார்ட் அறிக்கை 
6. வங்கி பாஸ்புக் அறிக்கை 
7. தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது 
8. ரேஷன் அட்டை 
9. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை 
10. பாஸ்போர்ட் 
11. வாக்காளர் அடையாள அட்டை 
12. ஓட்டுனர் உரிம அட்டை 
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று. 

வாழ்விடத்திற்கான சான்றுகள் 
1. மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது 
2. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது 
3. வங்கிக் கணக்கு அறிக்கை 
4. கிரெடிட் கார்டு அறிக்கை 
5. வங்கி பாஸ்புக் அறிக்கை 
6. வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீது 
7. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் சான்று 
8. பாஸ்போர்ட் 
9. வாக்காளர் அடையாள அட்டை 
10. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை 
11. ஓட்டுநர் உரிம அட்டை 
12. ரேஷன் அட்டை 
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.

 விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் மேற்கூறிய சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.

ஆதார் அடையாள அட்டை எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க என்ன செய்ய வேண்டும்?

undefined

ஆதார் அடையாள அட்டை எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க என்ன செய்ய வேண்டும்?
 வாக்காளருக்கான ஆதார் மற்றும் கூடுதல் விவரங்களை இணைப்பதற்கான வாக்குச்சாவடி அளவிலான சிறப்பு முகாம்கள் கடந்த 12.04.2015 முதல் அரசு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4.18 கோடி பேர், அதாவது 82 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வாக்காளருடன் தேர்தல் கமிஷன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்குவதற்கு இமெயில், தொலைபேசி எண், செல்போன் எண் போன்றவை அவசியமாக உள்ளன.

சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். அதைப் பார்த்துவிட்டு அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள், பெயர் சேர்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் உள்ள பெயர் நீக்கம், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய புகைப்படம் சேர்த்தல் ஆகியவற்றையும் செய்யலாம். ஆதார் எண், இமெயில், செல்போன் எண் போன்றவற்றை இணைப்பதற்கான சிறப்பு முகாமுக்கு வருகிறவர்கள், தங்களைப்பற்றிய பதிவுகளில் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ, அவற்றுக்கான அரசு தரப்பில் தரப்பட்டுள்ள ஆதாரங்களை கொண்டு வர வேண்டும்.

உதாரணமாக, முகவரி மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் முகவரிக்கான ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போட், ஆதார் அட்டை போன்றவற்றை வாக்காளர் கொண்டு வர வேண்டும். ஆதார் அட்டையின் நகலை வைத்திருப்பது நல்லது.

இதை கன்டிப்பாக எல்லோரும் செய்ய வேண்டும் ஆனால், இதை இணைப்பதற்காக நாம் தகவல் மையங்களில் பலமணி நேரம் காத்துக் கிடக்க வேண்டியதிருக்கிறது. 

அதனை இணையத்தில் 5 நிமிடங்களில் உடனடியாக  இதை நாம் செய்து விட முடியும் 

முதலில் http://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று அதில் Feed your aadhaar number என்ற லிங்கை கிளிக் செய்யும் போது feed your aadhaar number என்ற பக்கத்தை கிளிக் செய்யும் போது national voter service portel என்ற பக்கம் தோன்றும் அதில் search by EPIC NO என்பதில் நம்முடைய voter id no மற்றும் நம்முடைய மாநிலம் கொடுத்து search கொடுத்தால் உங்களுடைய voter id யில் உள்ள அனைத்து விபரங்களும் அதில் வரும் அதில் feed aadhaar no என்ற இடத்தை கிளிக் செய்தால் பக்கம் ஒன்று திறக்கும் அதில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், நம்பர், உங்கள் போன் நம்பர் இமெயில் id கொடுத்து submit செய்தால் போதும் உடனடியாக உங்கள் போன் நம்பர்க்கு confirmation message வரும். அவ்வளவுதான்
.